கமிஷனருடன் வியாபாரிகள் சந்திப்பு குமரகுரு கல்லூரியில் ஸ்வாகதம் 2023

கோவை, செப். 6: கோவை குமரகுரு தொழில்நுட்பம் கல்லூரியின் ஸ்வாகதம் 2023 என்ற 1400 மேற்பட்ட முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஸ்வாகதம் மூலம் கல்லூரியின் உள்கட்டமைப்புகள் மற்றும் திறமைகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டனர். மேலும், கல்வி இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்டத்தை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம் நிறுவனம் அதன் தொலைநோக்கு மற்றும் மாணவர்களை எவ்வாறு படிப்படியாக வளர்த்து வருகிறது என்பதை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு தளமாக அமைந்தது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயல்பாட்டில் கல்லூரிக்கு இணையாக சமமான பொறுப்பை வகிக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இதில், குமரகுரு நிறுவனங்களில் இணை தாளாளர் சங்கர் வானவராயர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post கமிஷனருடன் வியாபாரிகள் சந்திப்பு குமரகுரு கல்லூரியில் ஸ்வாகதம் 2023 appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.