கடந்த ஓராண்டில் தீயணைப்புதுறையால் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாப்பாக மீட்பு

திருச்சி, மே 4: கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரை ஓராண்டில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறைக்கு வந்த தீவிபத்து அழைப்புகளின் பேரில் தீயணைப்புதுறையால் ரூ.10.53 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட தீயணைப்புதுறை அதிகாரி அனுசியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

திருச்சி மாவட்ட தீயணைப்புத்துறையில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 மார்ச் ஏப்ரல் வரை அவர்களுக்கு வந்த அவசர அழைப்புகளில் 3053 அழைப்புகள் வந்துள்ளது. இந்த அழைப்புகளில் சிறிய அளவிலான தீ விபத்திற்காக வந்த அழைப்புகள் 785, கொஞ்சம் பெரிய அளவிலான தீ விபத்துக்காக வந்த அழைப்புகள் 21, தீயினால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஒரே ஒரு அழைப்பு என மொத்தம் 807 தீ விபத்துகளுக்கான அழைப்புகள் வந்துள்ளது. இந்த தீ விபத்துகளில் மொத்தம் ரூ.10 கோடியே 58லட்சத்து 33ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்த விபத்துக்கள் மூலம் 33 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை திருச்சி மாவட்ட அதிகாரி அனுசியா தெரிவித்தார்.

The post கடந்த ஓராண்டில் தீயணைப்புதுறையால் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாப்பாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: