திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி. ஜூன் 26: திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சித்தாநத்தம் ஊராட்சி, கரையாம்பட்டி கிராமத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 32.8 லட்சம் மதிப்பீட்டிலும், கே.பொியப்பட்டி ஊராட்சி, கத்திகாரன்பட்டியில் ரூபாய் 32.8 லட்சம் மதிப்பீட்டிலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளுக்கு புதிய மற்றும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நோில் சென்று பார்வையிட்டார். முன்னதாக, மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மரவனூர் நியாயவிலைக்கடைக்கு நேரில் சென்ற அவர் அங்குள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக் குறித்தும் ஆய்வு செய்தார். இதனைத் தொடா்ந்து, மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மரவனூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், மருத்துவமனை வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் நோயாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள், ஊராட்சி மன்றத்தலைவா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளா்ச்சித்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

The post திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: