கஞ்சா பதுக்கி விற்றவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு

திருச்சி, ஜூலை 3: திருச்சியில் 12 கிலோ விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
திருச்சியில் கடந்த ஜூன் 16ம் தேதி கண்டோன்மெண்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வ.உ.சி.சாலையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து அங்கு நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு, அதனை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, அச்சங்குளத்தை சோ்ந்த செல்வம் (54) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து இரு செல்போன்களையும் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செல்வத்தின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையை பாிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, அவர் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

கமிஷனர் உத்தரவின்படி வழக்கு பதிந்த போலீசார், அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செல்வத்திடம் சார்வு செய்தனர்.

The post கஞ்சா பதுக்கி விற்றவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: