மருங்காபுரி வட்டாரம் ஆமணக்கம்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகள் பயிற்சி

திருச்சி, ஜூன் 26: திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரம் ஆமணக்கம்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்றக்குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநா் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சியினை துவக்கி வைத்து கிராம வேளாண் முன்னேற்றக்கு குழு விவசாயிகளுக்கு காரிப் முன்பருவ பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும், முதலமைச்சாின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், உயிர் உரங்களின் முக்கியத்துவங்கள், இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்தும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். மேலும் அட்மாதிட்டங்கள் செயல்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினார். இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு மருங்காபுரி வட்டார வேளாண்மை அலுவலா் அருண்ஜீலியஸ் கலந்து கொண்டு கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்கள், உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி கூறினார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலா் வேல்முருகன் வேளாண்மைத்துறை மத்தியதிட்டங்கள், வேளாண்மைத்துறை சார்பில் இடுபொருள், நெல் ரகங்கள், விதை பண்ணை அமைத்தலின் முக்கியத்துவங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலா் கருணைபிரபு நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மாதிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

The post மருங்காபுரி வட்டாரம் ஆமணக்கம்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகள் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: