திருச்சி, ஜூலை 2: தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் நேற்று துவங்கியது. அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து, திருச்சி தேசிய அளவிலான “ஜூனியர் டென்னிஸ் சேம்பியன் சிப்’’ 16 வயதிற்குட்பட்ட இருபாலருக்கான தேசிய தரவரிசை போட்டி திருச்சி தீரன்நகர் தனியார் விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதில் ஓடிசா, பெங்களூர், மகாராஷ்டிரா, கொல்கத்தா மாநிலங்களிலிருந்து மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி, தஞ்சை, சேலம், கோயம்புத்துார், திருநெல்வேலி, உட்பட 10 மாவட்டங்களை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு ஏஐடிஏ நடுவர் ஜாய் முகர்ஜீ தலைமை வகித்தார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் கூடுதல் பொது மேலாளர் மார்ட்டின் முன்னிலை வகித்தார். இப்போட்டிகளை ஜெய்’ஸ் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் மதன் மோகன் தொடங்கி வைத்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
The post 16 வயதிற்குட்பட்ட தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 4 மாநில வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.