எங்கு யாரைப் புகழ வேண்டும்?

ஔவைப் பாட்டி எக்காலத்திற்கும் பயன்படும் படியாக பல்வேறு பாடல்களை அளித்துள்ளார்கள். அவை வாழ்க்கை எனும் ஓடத்திற்கு ‘நங்கூரமாய்’ நின்று அழகாக வழிநடத்திச் செல்லும். மனிதன் எப்பொழுதும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்? அவ்வாறு நடந்தால் எந்த இடத்திலும் கையில் தம்படி பைசா இல்லாமல் தம்மை தற்காத்துக்கொள்வான்; இல்ைல என்றாலும் சமாளித்துக் கொள்வான். அவற்றிலொன்றுதான் இப்பாடல். நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல் ஆசானை எவ்விடத்தும்அப்படியே வாச மனையாளைப் பஞ்சணையில்மைந்தர் தம்மை நெஞ்சில்வினையாளை வேலை முடிவில்!தன்னுடன் எப்பொழுதும் ஒட்டிக் கொண்டிருக்கும் நண்பனைக் அவன் இல்லாத (காணாத) இடத்தில் புகழ வேண்டும். தன்னை நல்வழிப்படுத்தி வழிகாட்டிய ஆசிரியரைக் காணும் இடங்களிலெல்லாம் போற்றி வணங்க வேண்டும். குடும்பத்தை தாங்கும் வீட்டின் இல்லாள் எனப்படும் மனைவியைப் பஞ்சணையிலும், பெற்றெடுத்த மக்களை நெஞ்சில் வைத்தும் பாசம் செலுத்த வேண்டும். பணி செய்யும் வேலையாளைப் வேலை முடித்த பின்னரும் பாராட்ட வேண்டும். இவ்வாறு நடந்தால் வாழ்க்கையில் சிரமமில்லாமல் இருக்கலாம்.- பொன்முகரியன்…

The post எங்கு யாரைப் புகழ வேண்டும்? appeared first on Dinakaran.

Related Stories: