10 பொருத்தங்கள் போதுமா?

பத்து பொருத்தம் பார்த்து செய்யும் திருமணமாகட்டும், விருப்ப திருமணமாகட்டும், நீண்டகால வாழ்க்கையாக இருப்பதில்லை. நூற்றுக்கு 60 சதவிகிதம் சிறப்பான வாழ்வு அமைவதில்லை. ஏன் என்று பார்த்தால், பத்து பொருத்தம் பார்த்து, தோஷங்கள் கணக்கீடு செய்து, தசாபுத்திகளை கணக்கீடு செய்து, குருபலம் பார்த்துத் தானே திருமணம் செய்கின்றோம்? ஆனாலும் எங்கு தவறு நேர்கிறது என்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொதுவாக, 10 பொருத்தம் என்பது, தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதைப்பொருத்தம் போன்ற பொருத்தங்கள், பிறப்பு நட்சத்திரத்தைக் கொண்டு மட்டுமே பார்க்கப்படுகிறது.

நீங்கள் வரன் பார்ப்பது மூன்று வயது குழந்தைக்கா, அல்லது 23 வயது வாலிபருக்கா?

ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி 4ம் பாதத்தில் பிறந்திருந்தால், 23 வயதில் அட்சய நட்சத்திரமாக கார்த்திகை 1ம் பாதம் செல்லும். பொருத்தம் பார்ப்பது அஸ்வினி 4ம் பாதத்திற்கா, கார்த்திகை 1ம் பாதத்திற்கா? மேஷ அட்சயராசி ஏஆர்பி (ARP) பெண்ணுக்கு என்றால், ஆணுக்கு கன்னி மற்றும் விருச்சிகம் ஏஆர்பி (ARP) பொருந்தாது. ராசியை மட்டும் வைத்து செய்யக் கூடிய திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கான காரணம், நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்ப்பது ஆகும். எனவேதான் அட்சய லக்ன பொருத்தம், அட்சய ராசி பொருத்தங்களையும், கட்டங்களில் இருக்கக் கூடிய கிரக அமைப்புகளையும் ஆராய்ந்து அறிந்த பின்பே திருமணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதை அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் வலியுறுத்துகிறது.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், உங்கள் லக்னம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் என்பதே அதன் சிறப்பு. துல்லியமாக 1வருடம் 1மாதம் 10 நாட்களுக்கு ஒரு முறை அட்சய லக்ன நட்சத்திரப் புள்ளி நகரும். வளரும் லக்ன நட்சத்திரப் புள்ளியின் படி, உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும். இங்கு நாம் நினைப்பது போல் ஜாதகம் எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல், உங்களுடைய ஆசைகளை எதிர்பார்ப்புகளை நீங்களே வளர்த்துக் கொள்ளாமல். ஜாதகத்தில் சுட்டிக் காட்டும் வழிமுறைகளை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்றோர்களும் பெற்ற பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டால், இல்லறம் நல்லறமாகவே இருக்கும்.

வளரும் லக்னம், மாறும் வாழ்க்கை, உங்கள் வயது கூடக்கூட உங்கள் தோற்றத்தில் உடையில் பேச்சில் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வது எவ்வாறு இயற்கையான நிகழ்வோ அதே போல், உங்கள் லக்னமும் மாறும். அதன்படி உங்கள் வாழ்க்கை அமையும். திருமணம் என்பது நீண்ட நாட்கள் தொடர வேண்டிய ஒரு பந்தம் என்பதால், ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வருடம் ஒரு மாதம் 10 நாட்கள் திருமணப் பொருத்தம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டும். ஆகையால், குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதல்களை ஒவ்வொரு ஆண்டுக்குமான பலன்களை, அட்சய லக்ன பத்ததி ஏஎல்பி (ALP) ஜோதிடர்களை அனுகி தெளிவு பெறலாம்.

The post 10 பொருத்தங்கள் போதுமா? appeared first on Dinakaran.

Related Stories: