சிக்கல்களைத் தீர்க்கும் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு!!

வீட்டில் இருக்கும் சிக்கல்கள் நிவர்த்தியாக அம்மனை வழிபாடு செய்யவேண்டும். வேலை செய்யும் இடத்தில், வெளியில் செல்லும்போது சிக்கல்கள் மத்தியில் சிதைந்து போய் மன அழுத்தம் அதிகரிக்கிறது. வீட்டிற்குச் சென்றால் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத்தில் வரும்பொழுது அங்கேயும் சிக்கல்கள் ஏற்பட்டால் நம்மால் தாங்கவே முடியாது.

அதனால் எப்பொழுதும் வீட்டை அமைதியாக வைத்திருப்பது அவசியமாகும். அது கொஞ்சம் சிரமம் தான் ஆனால் முடியும். சரியான தெய்வ வழிபாடு மூலம் வீட்டில் இருக்கும் சிக்கல்களை எளிதாகத் தவிர்க்கலாம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள சிக்கல்கள் தீரும். வெள்ளிக்கிழமை என்றாலே சிறப்பு தான். ஏனென்றால் விரதமிருப்பது, பூஜை செய்வது, வழிபாடு செய்வது என அனைத்து விதமான தெய்வ காரியங்களுக்கும் வெள்ளிக்கிழமை உகந்த நாளாகும்.

வீட்டில் இருக்கும் சிக்கல்கள் தீர வெள்ளிக்கிழமை அன்று காலை 5 மணியளவில் எழுந்து வீடு மற்றும் வாசலைச் சுத்தம் செய்துவிட்டு ஆறு மணிக்குள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் அம்மன் உருவப்படத்திற்குப் பூஜை செய்து மனதார வழிபட வேண்டும். தீப ஒளியில் அம்மனின் தங்களைப் பார்த்தால் நம் மனது ஒருநிலைப்பாடும். இதுபோல் தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமை அம்மனை விரதம் ஏற்று வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் சிக்கல்கள் தீரும். அதேபோல் சுக்கிரன், முருகன்,மகாலட்சுமி ஆகியோர்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

The post சிக்கல்களைத் தீர்க்கும் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு!! appeared first on Dinakaran.

Related Stories: