ஆப்கானில் இனி ஜனநாயகத்திற்கு இடமில்லை..இஸ்லாமிய ஷரியத் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்!: தாலிபான்கள் அறிவிப்பு..!!

ஆப்கான்: ஆப்கானில் தாலிபான்களின் ஆட்சி மன்ற குழுவை அரசே நிர்வகிக்கும் என்றும் ஷரியத் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான் தீவிரவாதிகள் அங்கு புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக பேசியுள்ள தாலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஹிதுல்லா ஹாஷ்மி, ஆப்கான் முன்னாள் விமானிகள், ராணுவ வீரர்களை மீண்டும் படையில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். தாலிபான்களின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஹிமத்துல்லா ஹகும்சலா தலைமையில் ஆட்சி நடைபெறும் என்றும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள யாரேனும் அதிபராக பதவி ஏற்பார்கள் எனவும் ஹாஷ்மி கூறியுள்ளார். ஆப்கானில் இனி ஜனநாயகத்திற்கு இடமில்லை என்றும் ஷரியத் சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே ஆப்கானில் இருந்து வரும் 21,000 அகதிகள் வரை தங்கள் நாடு ஏற்றுக்கொள்ளும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ஆனால் ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு சென்றடைவதை தாலிபான்கள் தடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தாலிபான்களை ஆப்கான் அரசாக அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்த ட்ரூடோ, பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் முடிவு ஒருதலைப்பட்சமானது என்று விமர்சித்தார். தாலிபான்கள் மீதான அச்சத்தில் ஆப்கான் மக்கள் உள்ள நிலையில் அங்குள்ள பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என 21 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில் உட்பட 21 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலை மற்றும் சுதந்திரம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள், மனித உரிமை நாடுகள் வரும் 24ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. …

The post ஆப்கானில் இனி ஜனநாயகத்திற்கு இடமில்லை..இஸ்லாமிய ஷரியத் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்!: தாலிபான்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: