அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: மகிழ்ச்சியுடன் வந்த மாணவ-மாணவிகள்

சென்னை: அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1-5ம் வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகள் வழக்கம் போல நேற்று  தொடங்கின. 9 நாள் விடுமுறைக்கு பிறகு உற்சாகமாக பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். தமிழகத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி  23ம் தேதி வரை நடந்தன.  இதையடுத்து, மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  அதில்,  1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான வகுப்புகள் 2023 ஜனவரி 5ம் தேதி தொடங்கும் என்றும், பிற வகுப்புகளான 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கின்ற மாணவ மாணவியருக்கான வகுப்புகள் 2023, ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறையில் இருந்த மேற்கண்ட உயர்வகுப்பு மாணவ மாணவியருக்கு வழக்கம் போல நேற்று  வகுப்புகள் தொடங்கின. 1-5ம் வகுப்புகள் 5ம் தேதி தொடங்க உள்ளன. பள்ளிகள்   திறக்கப்பட்டதை அடுத்து, மாணவ மாணவியர் உற்சாகத்துடன்  காலையில் பள்ளிக்கு சீருடை அணிந்து வந்தனர். சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை மலர் தூவி வரவேற்றனர்.  காலையில் 9 மணிக்கு இறைவணக்கம் நடந்தது. 9.30மணிக்கு வகுப்புகள் தொடங்கின. 6,7,8 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு 3ம் பருவ பாடப்புத்தகங்கள் சில பள்ளிகளில் வழங்கப்பட்டது….

The post அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: மகிழ்ச்சியுடன் வந்த மாணவ-மாணவிகள் appeared first on Dinakaran.

Related Stories: