அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளது. நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது.  தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறை 2017ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக 2018-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது….

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: