அபிஷேக் பானர்ஜியால் புதிய மோதல் சாட்டையை சுழற்றிய மேற்கு வங்க ஆளுநர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் பொது செயலாளரும் முதல்வரின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி ஹல்டியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஒரு சில நீதிபதிகள் ஒன்றிய அரசுடனான புரிதலின் அடிப்படையில் தனிப்பட்ட சிலரை பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த ஆளுநர் தங்கர் ஜெகதீப், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி. வரம்பு மீறி சிவப்பு கோட்டை தாண்டி விட்டதாக எச்சரித்தார். ஏற்கனவே மம்தா அரசுக்கும், ஆளுநருக்கும் பனிப்போர் நடக்கும் நிலையில் இது புதிய மோதலை உருவாக்கி உள்ளது. ஆளுநர் நேற்று தனது டிவிட்டரில் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிததத்தை பதிவிட்டுள்ளார். அதில், `எம்பி. தனது குற்றச்சாட்டுகளின் மூலம் நீதித்துறையை அவதூறாகப் பேசி உள்ளார். நீதிமன்ற செயல்பாட்டில் தலையிடுகிறார். சட்டத்தை மரியாதை குறைவாக கருதுகிறார். பானர்ஜியின் இத்தகைய தாக்குதல் நீதித்துறையை உலுக்கும் முயற்சி. ஜனநாயகத்திற்கு அடிக்கும் சாவு மணியாகும். இது ஆளுங்கட்சியினர் சட்டத்தை எப்படி கையாளுகிறார்கள் என்பதை காட்டுகிறது. நீதிமன்றம் குறித்த குற்றசாட்டில் பானர்ஜிமீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று ஜூன் 6ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டுள்ளார்.உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்புஇதற்கிடையே, அபிஷேக் பானர்ஜி நீதிமன்றத்தை களங்கப்படுத்தியது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென 2 வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாமாக முன்வந்து விசாரிக்கும் அளவுக்கு வலுவான காரணங்கள் இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இது குறித்து அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘‘நான் எந்த நீதிபதியின் பெயரையும், தீர்ப்பை பற்றியும் குறிப்பிடவில்லை. இந்த நாட்டின் எந்த குடிமகனுக்கும் நீதிமன்ற தீர்ப்பை பற்றி விமர்சிக்கும் உரிமை உண்டு’’ என்றார்….

The post அபிஷேக் பானர்ஜியால் புதிய மோதல் சாட்டையை சுழற்றிய மேற்கு வங்க ஆளுநர் appeared first on Dinakaran.

Related Stories: