விமான நிலையம் அருகே ரீல்ஸ் முதல்வர் மீது சட்ட நடவடிக்கை: அதிமுக ஐடி விங்க் வலியுறுத்தல்

 

சென்னை: டிரோன்கள் பறக்க அனுமதி இல்லாத விமான நிலையம் அருகில் முதல்வர் ரீல்ஸ் எடுத்துள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது:நேற்று முன்தினம் (29ம் தேதி) கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று ‘டிரோன் சாட்’ வைத்து ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்துள்ளார் இன்றைய முதல்வர் விஜய்.

விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கத்திப்பாரா பகுதி ரெட்ஜோன்-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பகுதியில் எந்தவித டிரோன்களும் பறக்க எவ்வித அனுமதியும் கிடையாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசும், டிஜிசிஏ இன்டியாவும் இதில் உடனடியாக தலையிட்டு வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: