நீட் எதிர்ப்பு போராட்டத்தை கண்டு ஒன்றிய பாஜ அரசைவிட தவெக அரசு தான் அதிகம் மிரளுகிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

 

சென்னை: நீட் எதிர்ப்பு போராட்டத்தை கண்டு ஒன்றிய பா.ஜ. அரசைவிட த.வெ.க. அரசு தான் அதிகம் மிரளுகிறது. மேலும் பரப்புரை பயணத்துக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: நீட், இடபிள்யூஎஸ் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ. அரசைவிட த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது.

பெரியாரை கொள்கை தலைவர் என சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலீசாரை குவித்திருப்பது ஏன்?. திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பரப்புரை பயணத்துக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்கு பணிந்து இதை செய்கிறார்கள்?.

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களை தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரை பயணத்தை தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலை கைவிட்டு ஆசிரியரின் பரப்புரை பயணத்துக்கு உரிய அனுமதியை த.வெ.க. அரசு வழங்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: