அதிமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது: புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி பேட்டி

 

சென்னை: சட்டசபை தேர்தலுடன் அதிமுக உடனான கூட்டணி முடிந்துவிட்டது, நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி கூறினார். சென்னை, தியாகராய நகரில், 2026-2027ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி நேற்று வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  தவெக அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக இந்த துறைக்கே செலவிட வேண்டும். புரட்சி பாரதம் சார்பில் தயாரிக்கப்பட்ட நிழல் நிதிநிலை அறிக்கையை முதல்வரை சந்தித்து வழங்க முயற்சி எடுப்போம். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகள் கர்நாடக காங்கிரஸ் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்கவில்லை என்றால் தமிழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் சட்டசபை தேர்தலுடன் அதிமுக உடனான கூட்டணி முடிந்து விட்டது, நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் போது தான் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு ஜெகன்மூர்த்தி கூறினார்.

Related Stories: