மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து வரும் 1ம் தேதி பாஜ ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை

 

சென்னை: தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், எஸ்.சதீஷ்குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து, வரும் 1ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: