சென்னை: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கிறது ஷூட்டிங் மாடல் தவெக அரசு என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி-மேகதாது பிரச்னையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது- மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்காதது- காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது – கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது.
இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் ஷூட்டிங் மாடல் தவெக அரசைக் கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், திமுகவின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம்-விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
