கரூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் காரில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தனர். அரசு நிகழ்ச்சி என்பதால், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முதல்வரின் கார் அருகே காத்திருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் காருக்கு காவலாக நின்ற மாஜிக்கள்
- விஜய்
- முதல் அமைச்சர்
- கரூர் கலெக்டர்
- அஇஅதிமுக
- சி. விஜயபாஸ்கர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- தவேகா
- அமைச்சர்
- செங்கோட்டையன்
