திமுக செய்தி தொடர்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: திமுக செய்தி தொடர்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக செய்தி தொடர்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது விவாத நிகழ்ச்சிகள், ஊடகங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் எப்படி பேச வேண்டும் என்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காங்கிரசின் துரோகத்தை தோலுரித்து காட்ட வேண்டும் எனவும், மற்ற கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து விமர்சனம் செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெக அரசின் குறைகள், மக்கள் விரோத செயல்பாடுகளை ஊடக விவாதங்களில் எடுத்துரைக்க வேண்டும். அரசின் குறைகள், மக்கள் விரோத செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களிலும் சுட்டிக்காட்டி பதிவிட அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: