ச.சசிகாந்த் செந்தில் எம்பி முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகி 20 பேர் காங்கிரசில் இணைந்தனர்

 

திருவள்ளூர், மே 15: திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் துணை செயலாளரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞருமான மீஞ்சூர் எம்.டி.இளையராஜா தலைமையில் பழவேற்காடு, லோகேஷ், இளங்கீரன், ராமு உள்பட 20 பேர், அதிமுகவில் இருந்து விலகி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில் முன்னிலையில் தங்களை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.
நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் மாவட்ட தலைவருமான ஏ.ஜி.சிதம்பரம், வடக்கு மாவட்ட தலைவரும், வழக்கறிஞருமான ஆர்.சசிகுமார், தெற்கு மாவட்ட தலைவர் காங்கை குமார், மாநில துணை தலைவர் செந்தமிழ் அரசு, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆ.திவாகர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் கலீல் ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: