திருத்தணி, மே 15: திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (48). இவர், அவரது மனைவியுடன் நேற்று இரவு திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறிய போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய நபரை பயணிகள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஆந்திர மாநிலம் நகரி அருகே காக்கவேடு கிராமத்தைச் சேர்ந்த சாய் (25) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
