புழல் காவாங்கரை பகுதி தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

 

புழல், மே 9: புழல் காவாங்கரை, சிவந்தி ஆதித்தன் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் விகாஸ் (35) என்பவரது தனியார் குடோனில் சமையலறை, பேக்கரி மற்றும் அலங்கார பொருட்களை இருப்பு வைத்து, அதனை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்வது வழக்கம்.
இந்த, குடோனில் நேற்று காலை 10 மணியளவில் வெண்புகை வெளியாவதை கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனடியாக புழல் காவல் நிலையத்திற்கும், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் மாதவரம், செங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த குடோனியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் லட்சக்கணக்கில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேற ஏதாவது காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: