பூட்டிய வீட்டில் 4 சவரன் திருட்டு

 

மாதவரம், மே 12: நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் 1வது தெருவை சேர்ந்தவர் எழிலரசி (56). இவர், நேற்று முன்தினம் பட்டாபிராமில் உள்ள தனது மருமகளை பார்க்க சென்று விட்டு, இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, பீரோவில் இருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து எழிலரசி திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: