திருவள்ளூர், மே 14: திருவள்ளூர் ஆர்எம் ஜெயின் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவன் ரா.ரகுநாத், 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கணிதம் – 99, கணினி அறிவியல் – 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதேபோல் மாணவி கி.திரித்தி, 500க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பொருளாதாரம் – 98, மார்க்கெட்டிங் – 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், மாணவன் அ.பாவிக், 500க்கு 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், பிசினஸ் ஸ்டடிஸ் – 98 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.
இவ்வாறு, தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும், ஆர்எம் ஜெயின் பள்ளிக் குழும இயக்குநர் கிஷோர் குமார், அறங்காவலர் பீகம் சந்த் ஜெயின், கல்வி ஒருங்கிணைப்பாளர் அஜித் பிரசாத் ஜெயின், பள்ளியின் முதல்வர் வி.எஸ்.ரேகா, துணை முதல்வர்கள் லக்ஷ்மி வரதன், மேரி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
