பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

 

திருத்தணி, மே.9. பிளஸ்2 பொதுத் தேர்வில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில், திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். திருத்தணி பள்ளிகள் அளவில் அப்பள்ளி மாணவன் டி.லோகேஷ் பயாலஜி (உயிரியல் பிரிவில்) 589/600 மதிப்பெண் பெற்று முதலிடம், எஸ்.கோகுல்(சிஎஸ்சி பிரிவு) 587/600 2ம் இடமும், என்.ஹரிணி 586, பி.ஜனனி 586 ஆகியோர் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும், இயற்பியல் பாடப்பிரிவில் 11 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 06 மாணவர்கள், கணிதத்தில் 06 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.பாலாஜி பாராட்டினார்.

Related Stories: