மும்பையில் அதிர்ச்சி: பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பலி

மும்பை: பிரியாணிக்கு பிறகு தர்பூசணி சாப்பிட் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானது மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை பைகோனியை சேர்ந்தவர் அப்துல்லா டோக்காடியா (40) இவரது மனைவி நஸ்‌ரீன் (35). இவர்களது மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனாப் (13) ஆகும். பைதோனி கட்டி கல்லியில் உள்ள முகால் பில்டிங்கில் இவர்களது வீடு உள்ளது. சனிக்கிழமை இரவு இவர்களது வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரியாணி விருந்து சாப்பிட்டனர். இதன் பின்னர் நான்கு பேரும் தர்பூசணி சாப்பிட்டனர். தர்பூசணி சாப்பிட்ட பின்னர் 4 பேரின் உடல் நிலை பாதித்தது. வாந்தி எடுத்தனர். தலை சுற்றுவது போல இருந்தது. அடிவயிற்றில் வலித்தது.

ஞாயிற்றுக் கிழமை காலை இரு மகள்களும் மயங்கிக் கிடந்தனர். உடனே இருவரும் ஜேஜே மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். சிறிது நேரத்தில் இரண்டாவது மகளும் இறந்துவிட்டார். இதன் பின்னர் சிறிது நேரத்தில் பெற்றோரும் இறந்துவிட்டனர். 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நான்கு மரணங்களுக்கும் உணவு விஷமானதே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மீதம் வைத்த தர்பூசணித் துண்டு ஒன்றை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Related Stories: