அணைகளில் தண்ணீர் குறைந்ததால் மின் உற்பத்தி சரிவு: கேரளத்தில் மின்வெட்டு அமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் நீர் மின் நிலையங்கள் மூலம் தான் பெரும்பாலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் மின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் கேரளத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணிநேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் இரவு 10.30 மணிக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சில பகுதிகளில் மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கேரள மின்வாரியத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறியது:
கேரளாவில் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் நிலைமையை சமாளிப்பதற்காக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறோம். இதே நிலை தொடர்ந்தால் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: