பறக்கும் படை அதிகாரிகள் பணியை கலெக்டர் ஆய்வு செங்கம் கரியமங்கலம் சுங்கச்சாவடி அருகே

செங்கம், ஏப். 21: திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தர்ப்பகராஜ் நேற்று மாலை செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான வசதிகள் மின்விசிறி குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து அதிகாரியுடன் கலந்தாய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து காரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை நிலை அலுவலர்களின் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன் மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: