மது பதுக்கி விற்ற 2 பேர் கைது

 

தண்டராம்பட்டு, ஏப். 20: தண்டராம்பட்டு அடுத்த கொலமஞ்சனூர் பகுதியில் மது பாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தானிப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி எஸ்ஐ ஆகாஷ் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது பூமிநாதன்(56), அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள்(50) இருவரும் மது பாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து தலா 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: