4 பேர் மீது வழக்கு வேப்பமரம் வெட்டியதில் தகராறு

வந்தவாசி, ஏப், 21: வந்தவாசி அருகே வேப்பமரம் வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி(45). இவரது உறவினர் முத்துக்குமார்(43) இருவரது விவசாய நிலம் அருகருகே உள்ளன. வரப்பில் வேப்பமரம் இருந்தது. இதனை கடந்த 18ம் தேதி அன்று முனுசாமி வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற முத்துக்குமார் இவரது தந்தை மணி இருவரும் ஏற்கனவே இந்த மரம் இருவருக்கும் பொது என கூறியிருந்த நிலையில் எப்படி வெட்டலாம் என கேட்டனர். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். முனுசாமிக்கு ஆதரவாக தங்க ராணியும் முத்துக்குமாருக்கு ஆதரவாக மணியும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த முனுசாமி முத்துக்குமார் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே தேசூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பைச் சேர்ந்த 4 நபர்களையும் தேடி வருகிறார்.

Related Stories: