அரசுப் பணி நியமனம் ரத்து செய்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: கரூர், வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10ம் தேதி கரூர் சென்ற முதல்வர் ஜோசப் விஜய், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தீரன் திருமுருகன்,வழக்கறிஞர் சீனி அகமது உட்பட மூன்று பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மேற்கண்ட வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: