இம்பால்: மணிப்பூரில் நாகா இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் நோனி மாவட்டத்தின் பிட்டியாங் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கிராமப்புற தன்னார்வலர் ஒருவர் கொல்லப்பட்டார்; மற்றொருவர் காயமடைந்தார். மேலும், சிஆர்பிஎப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
