புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் 2025ம் ஆண்டு அறிக்கையின்படி, நாடு முழுவதும் ரூ.1,980 கோடி மதிப்பிலான சுமார் 1.34 லட்சம் கிலோ கிராம் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேஆண்டில், சாதனை அளவாக 42,282 ஏக்கர் பரப்பளவிலான அபின் சாகுபடி அழிக்கப்பட்டது” என வேதனை தெரிவித்தார்.
மேலும், “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் என்ற 100 வாரங்கள் நடக்கும் நாடு தழுவிய பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் 10,000 இடங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைப்பயணங்கள், விளையாட்டுகள, தியான அமர்வுகள், தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் கலைப்போட்டிகள் போன்றவை நடைபெறும் என்றார்.
