தமிழ்நாட்டில் இடைத்தேர்தலுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: தமிழ்நாட்டில் இடைத்தேர்தலுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மனுதாரர் வெங்கடாஜலபதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது. தேர்தல் வழக்கு முடியும் முன்பு இடைத்தேர்தல் நடத்தினால் அரசியல் சாசன பிரச்சனை எழும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த வெங்கடாஜலபதி என்பவர்தான், தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்த கேவியட் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்த தேர்தல் உத்தரவுக்கு எதிராக இதுவரை யாரும் மேல்முறையீடு செய்யாத நிலையில், ஒருவேளை அவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டால், தன் தரப்பு வாதத்தைக் கேட்காமல் நீதிமன்றம் எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த கேவியட் மனுவை வெங்கடாஜலபதி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: