*ஊரக வளர்ச்சி பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே பொதக்குடியில் ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஊரக வளர்ச்சி துறை பணியாளர் சங்க கூட்டம் பொதக்குடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட குழு சார்பில் மாவட்ட தலைவர் சாந்தகுமார் கலந்து கொண்டார்.
இதில் ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஆரோக்கியசாமி மற்றும் பொருப்பாளர்கள் கண்ணன், தமிழார்வன், சாமி, செல்வம், சிவநேசன், அஞ்சலி, அஜித்குமார் நாகூரான், ராஜகோபல் பன்னீர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மோட்டார் இயக்குபவர்கள் 2000 ஆண்டிற்கு முன்னர் பின்னர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனே அமுல்படுத்த வேண்டும், தூய்மை பணியார்களுக்கு அரசு அறிவித்த புதிய ஊதியம் ஆணை வழங்கிடவும், 7வது ஊதிய குழு நிலுவையை கணக்கிட்டு பாக்கி இல்லாமல் வழங்கிட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாத மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும், அனைவருக்கும் பணிபதிவேடு துவங்கிடவும், துவங்கிய பணிபதிவேடு புதிய ஊதிய உயர்வை பதிவு செய்திடவும் வேண்டும், குழு காப்பீடு பிடித்தம் செய்ததை உடனே உரிய கணக்கில் செலுத்தி ரசீது நகல் வழங்கிட வேண்டும், கிராம ஊராட்சியில் பணிபுரியும் கம்யூட்டர் ஆப்ரேட்டர்களுக்கு உரிய ஊதியத்தை மாத மாதம் வழங்கிட வேண்டும் , அனைவருக்கும், அடையாள அட்டை வழங்கிட வழிவகை செய்ய வேண்டும போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் தனபால் நன்றி கூறினார்.
