கைவிரல்கள் இல்லாதவர்களுக்கு மாற்று பயோமெட்ரிக் மூலம் ஆதார்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஆதார் பெறுவதற்கு தகுதி வாய்ந்த கைவிரல்கள் இல்லாத மற்றும் மங்கலான விரல் ரேகை கொண்டவர்களுக்கு மாற்று பயோமெட்ரிக் மூலமாக ஆதார் வழங்குவதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ‘ ‘கைவிரல்கள் இல்லாதவர்கள், மங்கலான கைரேகைகள் அல்லது பிற குறைபாடு உடையவர்களுக்கு மாற்று பயோமெட்ரிக் மூலமாக ஆதார் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும் ஆலோசனை அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருவர் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவராக இருந்து கைரேகை , கருவிழி ஸ்கேன் என இரண்டையும் வழங்க முடியாதவர்கள் இரண்டடையுமே சமர்பிக்காமல் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யலாம். அத்தகைய நபர்களுக்கு பயோமெட்ரிக் விதிவிலக்கு பதிவு வழிகாட்டுதலின் கீழ் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி/ ஆண்டு ஆகிய தகவல்களுடன் சமர்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கைவிரல்கள் இல்லாதவர்களுக்கு மாற்று பயோமெட்ரிக் மூலம் ஆதார்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: