இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பாஜ அரசு திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

விருதுநகர்: இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பணியிடங்களுக்கான நேர்காணலில் தகுதியானவர்கள் வரவில்லை என்றால் அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிவித்து இருப்பதை கண்டிக்கிறோம். படிப்படியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக இருக்கிறது. ஏற்கனவே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஐடி போன்ற நிறுவனங்களில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் பேராசிரியர்களாக வருவது அபூர்வமாகி விட்டது’ என்றார்.

* நிதிஷ்குமார் பச்சோந்தி காதில் பூ சுற்றும் எடப்பாடி
ஜவாஹிருல்லா கூறுகையில், ‘சுயநலத்திற்காக ஒவ்வொரு அணியாக மாறிக்கொண்டிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை ஒரு அரசியல் பச்சோந்தி என அழைக்கலாம் சிறுபான்மை மக்களின் காதுகளில் எடப்பாடி பழனிசாமி பூச்சுற்றி வருகிறார். எடப்பாடி எந்த நேரத்திலும் பாஜகவிற்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டை எடுப்பார்’ என்றார்.

The post இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பாஜ அரசு திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: