ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறைவு பெற்ற 10 பேர் உதவி மற்றும் சார் ஆட்சியர்களாக நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை: தலைமைச்செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி பயிற்சியை நிறைவு செய்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளில் 5 பேர் உதவி மாவட்ட ஆட்சியராகவும் மற்றும் 5 பேர் சார் ஆட்சியர்களாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, குளித்தலை உதவி மாவட்ட ஆட்சியராக சுவாதி , தேவக்கோட்டை உதவி மாவட்ட ஆட்சியராக ஆயுஷ் வெங்கட் வத்ஸ், திருக்கோவிலூர் உதவி மாவட்ட ஆட்சியராக ஆனந்த் குமார் சிங், பெரம்பத்தூர் உதவி மாவட்ட ஆட்சியராக ஆஷிக் அலி நியமனம் செய்யப்படுகின்றனர்.

அதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சார் ஆட்சியராக சிவானந்தம், கும்பகோணம் சார் ஆட்சியராக ஹரித்யா விஜயன், குன்னூர் சார் ஆட்சியராக சங்கீதா, பழனி சார் ஆட்சியராக கிருஷ்ண குமார், பத்மநாமபுரம் சார் ஆட்சியராக வினய் குமார் மீனா மற்றும் பெரியகுளம் சார் ஆட்சியராக ரஜத் பீடோன் நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறைவு பெற்ற 10 பேர் உதவி மற்றும் சார் ஆட்சியர்களாக நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: