திருவெறும்பூர்: திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு பயணிகள் ரயில் நேற்று காலை 8.25 மணிக்கு புறப்பட்டது. இதில் முன்னும், பின்பும் 2 இன்ஜின்கள் உள்பட மொத்தம் 8 பெட்டிகள் இருந்தது. வேளாங்கண்ணி தேர்பவனி என்பதால் நேற்று 600க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். காலை 9 மணிக்கு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்தது. அங்கு பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது பின்புறம் உள்ள இன்ஜினிலிருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் இன்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்து இறங்கினர். தகவலறிந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
இதில் இன்ஜின் லேசாக சேதமடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் வந்த பயணிகள் அடுத்து வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டனர். பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள், அதிகாரிகள் வந்து காலை 10 மணி முதல் 12.30 மணிவரை ஆய்வு செய்தனர். இன்ஜினில் ஹட்ராலிக் ஆயில் கசிவு ஏற்பட்டதால், புகை ஏற்பட்டு தீ பிடித்ததாக தெரியவந்துள்ளது. இந்தசம்பவத்தால் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ரயிலில் தீ: பயணிகள் ஓட்டம் appeared first on Dinakaran.