ஓசூர்: ஓசூரில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: மகாவிஷ்ணு விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். அரசு பள்ளியில் மகா விஷ்ணுவை பேச வைத்த தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர். அரசு பள்ளியில் அவரை பேச வைப்பதற்கு அனுமதி கொடுத்தவர்கள் யார்? என விசாரித்து, அவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி முகாம் நடத்தி, மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளின் தரம் குறித்து, தமிழக ஆளுநர் ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்று பேசி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கல்வியில் உயர்வாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் உள்ள சில ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பள்ளி கல்வித்துறையின் தரத்தை குறைத்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கல்வியில் தமிழகம் உயர்வாக உள்ளது; அரசு பள்ளிகளின் தரம் குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதா?.. ஆளுநர் மீது கே.பி.முனுசாமி காட்டம் appeared first on Dinakaran.