தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ரூ.462 கோடி செலவில் 1724 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி| ஒன்றிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது சிப்காட் நிறுவனம். தருமபுரியில் அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: