திருச்சி பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் பட்டம் விடும் போராட்டம்: பட்டமளிப்பு விழா நடத்தாமல் விட்டால் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தல்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவை நடத்தாமல் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கதினர் பட்டம் விடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 120-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர்.

கடந்த 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது. அதன் காரணமாக சுமார் 2 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டமளிப்பு விழாவை நடத்ததற்கு கரணம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி வழங்காதது என கூறி இந்திய மாணவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டமளிக்கும் போது அங்கியை அணிந்து முழக்கமிட்டனர். ஒன்றிய அமைச்சர்களை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்தாவிட்டால் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

The post திருச்சி பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் பட்டம் விடும் போராட்டம்: பட்டமளிப்பு விழா நடத்தாமல் விட்டால் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: