ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு மேல் விற்பனை.. மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்வு: இல்லத்தரசிகள் கலக்கம்!!

சென்னை : சென்னையில் அரசின் கூட்டுறவு காய்கறி விற்பனை மையங்களில் ஒரு கிலோ ரூ.60க்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் பொதுச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ.60க்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு வாடிக்கையாளருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. தக்காளி விலை உயர்வை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் விலை ரூ. 110-க்கும், பாகற்காய் விலை ரூ. 60-க்கும், பச்சை மிளகாய் விலை ரூ.80-க்கும், பட்டாணி விலை ரூ. 180-க்கும், இஞ்சி விலை ரூ. 190-க்கும், பூண்டு விலை ரூ.130-க்கும், வண்ண குடமிளகாய் விலை ரூ. 180-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மொத்த விலை அங்காடிகளுக்கு வரத்து வெகுவாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு மேல் விற்பனை.. மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்வு: இல்லத்தரசிகள் கலக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: