இந்நிலையில் நாடு முழுவதும் இன்று புதிதாக 203பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,961ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 1,435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 189ஆக குறைந்துள்ளது. இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 203 பேரில் அதிகபட்சமாக டெல்லியில் 47 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் மேற்குவங்கத்தில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தாலா ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 189ஆக குறைந்தது! appeared first on Dinakaran.
