தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சிவ்தாஸ் மீனா; பொறுப்புகளை ஒப்படைத்தார் இறையன்பு..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். 2021ம் ஆண்டு முதல் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த வெ.இறையன்பு பணி ஓய்வு பெற்றார். சேலத்தில் 1963ல் பிறந்த இறையன்பு 30 ஆண்டுகளாக அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். நாகை உதவி ஆட்சியராக, கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக, காஞ்சிபுரம் ஆட்சியராக இறையன்பு பதவி வகித்தவர். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இறையன்பு முதன்மைச் செயலராக பணியாற்றியுள்ளார்.

தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தலைமைச்செயலாளராக பொறுப்பேற்ற சிவ்தாஸ் மீனாவிடம் பொறுப்புகளை இறையன்பு ஒப்படைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை சிவதாஸ் மீனா கவனித்து வந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கியவர்.

காஞ்சிபுரம், கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் கூடுதல் ஆட்சியர் உட்பட பல பதவிகளை வகித்தவர். ஊரக வளர்ச்சி, நில நிர்வாகம், போக்குவரத்துத் துறை, ஆகியவற்றிலும் சிவ்தாஸ் மீனா முக்கிய பொறுப்பு வகித்தவர். கூட்டுறவு, உணவு, நுகர்வோர் துறையின் முதன்மை செயலாளராகவும் பதவி வகித்தவர். ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளை ஷிவ்தாஸ் மீனா அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சிவ்தாஸ் மீனா; பொறுப்புகளை ஒப்படைத்தார் இறையன்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: