தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கி கவுரவித்தார்

புதுடெல்லி: ஆசிரியர் தினத்தைமுன்னிட்டு 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். முன்னாள்ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக செப்.5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது உயர்கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார். விருது பெறுவோருக்கு சான்றிதழ், ரூ.50,000 ரொக்கம், மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் விருதை பெற்றுக்கொண்டனர்.

The post தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கி கவுரவித்தார் appeared first on Dinakaran.

Related Stories: