போட்டி தேர்வுகளில் முறைகேடு: ஆயுள் தண்டனை ரூ.1 கோடி அபராதம்: உ.பியில் அவசர சட்டம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, ஆள்சேர்ப்பு முறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், கீழ்நிலை பணியாளர் தேர்வாணையம், பல்கலைகழகங்கள் மற்றும் அவற்றால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் அடங்கும். அதன்படி வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனையும், மேலும் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்” என்றார்.

The post போட்டி தேர்வுகளில் முறைகேடு: ஆயுள் தண்டனை ரூ.1 கோடி அபராதம்: உ.பியில் அவசர சட்டம் appeared first on Dinakaran.

Related Stories: