இதில், இதுவரை 81,923 மாணவர்கள் வெற்றிகரமாக சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது 3ம் கட்ட மாணவர் சேர்க்கை செயல்முறைகள் நடக்கின்றன. மேலும், முதுநிலை மற்றும் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப்பதிவும் தற்போது இந்த இணையதளத்தின் மூலமே தொடங்கப்பட்டு மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். செய்திதாளில் வெளிவந்துள்ள செய்திபோல் இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை.
மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. www.tngasa.in என்ற இணையதளதில் மட்டும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tndce.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் சென்று இந்த மாணவர் சேர்க்கை இணையதளத்தை சென்றடையலாம். எனவே, செய்திதாளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்.
The post மாணவர் சேர்க்கை இணையதளத்தில் எந்தவித குறைபாடுகளும் இல்லை: அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.
