மதுரை: மதுரையில் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நல்லிணக்கப் பேரணி நடைபெறுகிறது. ராஜா முத்தையா மண்டபத்திலிருந்து சட்டக் கல்லூரி காந்தி அருங்காட்சியகம் வரை நடைபெறும் இந்த பேரணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, எஸ்டிபிஐ தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
